`தமிழகத்தில் வெற்றிடம் உருவாகியுள்ளது! - இயக்குநர் பாரதிராஜா வருத்தம்

 

பாரதிராஜா

தேனி மாவட்டம் கம்பத்தில் நேற்று (28-01-2018) நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்த இயக்குநர் பாரதிராஜா,  பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், "வைரமுத்து வருத்தம் தெரிவித்தும், ஜீயர் எங்களுக்கு கல் எரியத் தெரியும், சோடா பாட்டில் எரியக் தெரியும் என்று கூறுகிறார்.  நாங்கள் அரிவாள் கொடுக்கிறோம் அதையும் பழகிக் கொள்ளுங்கள். இன்னும் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். தமிழகத்தில் இரண்டு மெயின் சுவிச் இல்லை. இதனால் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கிறது. திரை உலகத்தில் உணர்வு உள்ளவர்கள் குரல் கொடுக்கிறார்கள்.

வைரமுத்துவின் பாடல் வரிகளால் புகழ் பெற்றவர்கள் இன்று அவருக்கு குரல் கொடுக்க மறுக்கிறார்கள். இவர்கள் அரசியலுக்கு வந்து எங்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள். சென்னையில் உள்ளது போல திரைப்படக் கல்லூரி தேனி மாவட்ட மக்களுக்காக இலவச திரைப்பட கல்லூரி வருங்காலத்தில் கட்டுவேன்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!