`சென்னை ஏர்போர்ட்டுக்கு ஏன் வந்தானென்று தெரியல!' - போலீஸிடம் கதறிய ஐ.டி இளைஞரின் பெற்றோர்

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் நான்காவது நுழைவு வாயில் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர்  இன்று காலை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சென்னை

File Photo
 

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது. அப்போது, தற்கொலை செய்துக்கொண்டவரின் பெற்றோரை செல்போனில் தொடர்புக்கொண்ட போலீஸார், எங்க மகன் எதுக்கு சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்தான் என்று தெரியவில்லை என்று கதறியுள்ளனர். காவல்துறை தரப்பில் மேலும் கூறுகையில், "கீழே விழுந்த இளைஞர் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த சைத்தன்யா. 30 வயதான சைத்தன்யா பெங்களூரில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.  சைத்தன்யா விமான நிலையத்துக்கு எந்த பையும் கொண்டு வரவில்லை. அவரிடம் விமான டிக்கெட்டும் இல்லை. ஒருவேளை அவரின் மொபைலில் இ.டிக்கெட் இருக்கலாம். மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் அவரின் ஐபோன் உடைந்துவிட்டது. எனவே, அதை சரிசெய்து பார்த்தால்தான் எதற்காக சென்னை விமான நிலையம் வந்தார் என்பது தெரியவரும். அவர் தெரியாமல் கீழே விழுந்திருக்க வாய்ப்புகள் குறைவு. இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!