ஒவ்வொரு திங்கள்கிழமையும் உஷாராகும் போலீஸ்!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியரகங்களிலும் ஒவ்வொரு திங்கள்கிழமையன்றும் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் சம்பந்தப்பட்ட மாவட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், அந்த மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களின் பிரச்னைகளைக் கூறி மனு அளிக்கலாம். மாவட்ட ஆட்சியரே மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெறுவதால், மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெறும் நாள்களில் மட்டும் வழக்கத்துக்கும் மாறாகப் பொதுமக்கள் வருகை அதிகரித்துக் காணப்படும்.

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கந்துவட்டி பிரச்னை காரணமாகத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற தீக்குளிப்புச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை உண்டாக்கியது. எனவே, அச்சம்பவத்துக்குப் பிறகு, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியரகங்களில் காவல்துறைப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டன. இனி அதுபோன்ற எந்தவோர் அசம்பாவிதமும் மாவட்ட ஆட்சியரகங்களில் நடைபெற்றுவிடக் கூடாது என்பதில் காவல்துறை உன்னிப்பாக இருக்கிறது.

இந்நிலையில், தற்போது திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தின் நுழைவு வாயில் பகுதியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஆட்சியரகத்தின் உள்ளே நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமாகப் பரிசோதிக்கப்படுகிறது. மேலும், அவர்கள் கொண்டு வரும் உடைமைகள் அனைத்தும் சோதனையிட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்காகத் தற்காலிக அறையும் உருவாக்கப்பட்டு அவர்களைப் பெண் காவலர்கள் சோதனையிடுகிறார்கள். அத்துடன் எந்நேரமும் 108 - மருத்துவ வாகனம் ஒன்றும் தயார் நிலையில் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!