`அமைதியான நிலையைத் தோற்றுவிக்கிறது' - மதுரை காந்தி மியூசியத்தில் ஆளுநர் மகிழ்ச்சி!

ஆளுநர்

மதுரைக் காந்தி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று (29ம்தேதி) மதுரை அருகே தூய்மை இந்தியா திட்ட செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் இன்று பங்கேற்ற ஆளுநர், பிறகு நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஜி.ஓ காலனியிலுள்ள அங்கன்வாடி மையத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின் மதியம் தமுக்கம் மைதானம் அருகே இருக்கும் காந்தி அருங்காட்சியகத்தைச் சுற்றிப்பார்த்த பின் காந்தியின் புகைப்படங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டார். காந்தியின் ரத்தகறை படிந்த அவரின் உடை மற்றும் காந்தி பயன்படுத்தி மூக்குகண்ணாடியைப் பார்வையிட்டார்.

 

காந்தி அருங்காட்சியகம் பற்றி மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், ஆளுநருடன் இருந்து விளக்கினார். காந்தி மியூசியத்தை பார்வையிட்ட ஆளுநர், 'இங்கு வந்தது எனக்கு மிகவும் அமைதியான நிலையைத் தோற்றுவிக்கிறது' என்றார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மதுரையில் பல இடங்களுக்குச் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!