ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்காமல் `கஜினிகாந்த்' படத்தில் நடித்த ஆர்யா!

இப்போது, ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் உருவாகிவரும் 'கஜினிகாந்த்' படத்தை, 'ஹர ஹர மஹாதேவி' 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படங்களின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்குகிறார். ஆர்யா, 'வனமகன்' சாயிஷா நடிக்கும் பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டன. இதுவரை ஆர்யா நடித்து வெளிவந்த பெரும்பாலான படங்கள் ரிலீஸாகும் சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் துயரத்தைப் பார்த்து தன்னுடைய சம்பளத்தை அதிக அளவு விட்டுக்கொடுத்து இருக்கிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவான `மீகாமன்' திரைப்படம் வெளிவரும்போது தயாரிப்பாளருக்கு பணத்தட்டுப்பாடு இடையூறு நேர்ந்தபோது தன் சம்பளத்தை மட்டுமல்ல, தானே கையெழுத்துப்போட்டு பைனான்ஸில் பணம் வாங்கிக் கொடுத்து ரிலீஸாக உதவி செய்தார். புதுப்படங்களில் நடிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொண்டவரை பெரிதாக எந்தப் பிரச்னையிலும் சிக்காமல் இருந்து வந்தார். சொந்தமாகப் படங்களைத் தயாரித்தபோது ஏனோ நெருக்கடியில் சிக்கிக்கொண்டார்.

ஆர்யா

இப்போது  தயாரிப்பு தொழிலுக்கு குட்பை சொல்லிவிட்டு முழுநேர நடிகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார். ஞானவேல்ராஜா 'கஜினிகாந்த்' படத்துக்காக ஒப்பந்தம் செய்வதற்கு வந்தபோது ஆர்யா சம்பள விவரம் குறித்து எதுவுமே பேசவில்லை. இதோ முழுப்படமும் முடியப்போகிறது ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்காமல் நடித்து முடித்துக் கொடுத்து இருக்கிறார், ஆர்யா. 'கஜினிகாந்த்' படத்தின் தமிழ்நாடு, பிறமொழிகள், ஓவர்ஸீஸ், சாட்டிலைட் பிசினஸ் அனைத்தும் முடிந்தது. லாபத்தில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு பணத்தை சம்பளமாகத் தருவதாக ஞானவேல் ராஜா கூறியிருக்கிறார், ஆர்யாவும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!