மாநில `வஸ்தா' போட்டிகளில் அரியலூர் மாவட்டம் முதலிடம்!

ஜெயங்கொண்டத்தில் மாநில அளவில் நடைபெற்ற வஸ்தா விளையாட்டுப் போட்டிகளில் அரியலுர் மாவட்டம் முதலிடத்தைப் பெற்றது.
 

தமிழ்நாடு வஸ்தா விளையாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 8 வயது முதல் 34 வயதுடைய எடை பிரிவு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டியில் அரியலூர், பெரம்பலூர், கடலூர், நீலகிரி, திருவாரூர் நாகப்பட்டினம், தஞ்சாவூர், கரூர், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், தருமபுரி, திருநெல்வேலி, சேலம், கன்னியாகுமரி, சென்னை, தேனி என 18 மாவட்டடங்களைச் சேர்ந்த 8 முதல் 34 வயது வரை உள்ள வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடினர். இதில் அலங்கார சுற்றுதல், தனித்திறமைப் போட்டி, தொடு போட்டிகள் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

இந்த வஸ்தா போட்டி நடுவர்களாக கராத்தே மாஸ்டர்கள் செல்வக்குமார், மோகன் ஆகியோர் செயல்பட்டனர். நேற்று போட்டிகள் முடிந்த நிலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு  தமிழ்நாடு வஸ்தா விளையாட்டு சங்க தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். அரியலூர் மாவட்டத் தலைவர் டாக்டர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களில் அரியலூர் மாவட்ட வீரர்கள் அதிக பதக்கங்களையும் இரண்டாவதாகத் திண்டுக்கல் மாவட்டத்தினரும் மூன்றாவதாகக் கோவை மாவட்டத்தினரும் பெற்றனர்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கென்னடி பதக்கங்களையும் சான்றுகளையும் வழங்கி பாராட்டி விளையாட்டில் வெற்றி பெறுவது பெரிய விஷயம் அல்ல நம்முடைய வாழ்க்கையிலும் வெற்றி பெற வேண்டும் அதற்காக வீரர்கள் முழுமையாகக் கவனத்தைத் திருப்ப வேண்டும் என்று வீரர்களுக்கு உத்துவேகமூட்டி பாராட்டி பேசினார்.

இன்ஸ்பெக்டர் வேலுசாமி, அன்னை தெரசா பள்ளி தாளாளர் முத்துக்குமரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக வஸ்தா விளையாட்டு சங்க செயலாளர் சேவியர் பொன்னுசாமி வரவேற்றார். இறுதியில் சேலம் மாவட்டச் செயலாளர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!