டிராஃபிக் போலீஸுக்கு சிக்கலான காற்று மாசு - மனித உரிமை ஆணையம் திடீர் உத்தரவு

மனித உரிமை ஆணையம்

காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகும் போக்குவரத்துப் போலீஸாரின் நிலைமை குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகளுக்குத் தேசிய மனித உரிமை ஆணையம் விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

நாடு முழுவதும் போக்குவரத்து போலீஸ் துறையில் பணிபுரியும் காவலர்களின் நல உரிமை விவகாரம் தொடர்பாகப் பல்வேறு தரப்பிலும் அக்கறையான கருத்துகளும் ஆதங்கங்களும் முன்வைக்கப்படுகின்றன. வாகனங்கள் வெளியிடும் அசுத்தமான காற்றால் காற்று மண்டலமானது அதிக அளவில் பாதிக்கப்படுகிறது; இதனால் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாகி, அவர்களின் வாழும்காலமும் குறைந்துவருகிறது. இத்துடன், அவர்களின் இனப்பெருக்க மண்டலமும் பாதிக்கப்படுகிறது. ஆனாலும், பெரும்பாலான மாநில அரசுகள் இவர்களுக்கு உரிய சுகாதார வசதிகளை வழங்காமலும் கூடுதல் தொகையையும் வழங்காமலுமே இருந்துவருகின்றன. 

இந்நிலையில், இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துள்ள மனித உரிமை ஆணையமானது, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் எட்டு வாரங்களுக்குள் சாதகமான பதிலை அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!