இது பாபா முத்திரை அல்ல; ஆட்டுத்தலை! ரஜினியைச் சாடிய சரத்குமார் 

"ரஜினிகாந்த் காட்டுவது பாபா முத்திரை அல்ல; ஆட்டுத்தலை" என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கடுமையாக விமர்சித்துப் பேசினார். 

sarath kumar

நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி பேருந்துக் கட்டணங்களை உயர்த்தியது தமிழக அரசு. இதற்கு பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, நேற்று முன்தினம் கட்டண உயர்வை ஓரளவில் குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், அரசின் இந்தக் கட்டண குறைப்பு வெறும் கண்துடைப்பு என்றும், கட்டண உயர்வை முழுமையாக வாபஸ் பெறும்வரை போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவித்து தங்களது போராட்டங்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வருகின்றன. 

sarath

இந்த நிலையில், பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ச.ம.க தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக, கண்டனப் பொதுக்கூட்டத்துக்கு கலந்துகொள்ள வந்த சரத்குமார் சைக்கிளில் பயணம் செய்து பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.

மேடைக்கு சிறிது தூரம் முன்பு இருந்து சைக்கிளில் பயணம் செய்து தனது கண்டனத்தை சரத்குமார் பதிவு செய்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என கூறிவிட்டு அமெரிக்கா சென்றவர் ரஜினிகாந்த். தற்போது ரஜினிகாந்த் காட்டுவது பாபா முத்திரை அல்ல; ஆட்டுத்தலை. காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் நிலைப்பாடு என்ன? என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார். மேலும், வாக்களிக்கப் பணம் தருவோரை செருப்பால் அடியுங்கள் என்றும் ஆவேசமாக பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!