கர்ணனும் நீயே தருமரும் நீயே! - மதுரையை மிரளவைத்த அழகிரி பிறந்தநாள் விழா

தி.மு.க-வின் முன்னாள் தென்மண்டல அமைப்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் 67 வது பிறந்த தினம், இந்த வருஷம் எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியான முறையில் மதுரையில் நடந்து வருகிறது. மதுரையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் அழகிரிக்கு என்று தனியாக ஆதரவாளர் கூட்டம் முன்பு இருந்தது. காலமாறுதலில் அனைத்தும் தலைகீழானது. அவரால் வளர்த்து விடப்பட்டவர்கள் பலரும் ஸ்டாலின் பக்கம் சென்றுவிட்டார்கள். தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டதால் அவரும்  அமைதியாக அனைத்தையும் கவனித்துக்கொண்டிருக்கிறார். 

கழகத்தின்


தி.மு.க ஆட்சியிலிருந்தபோதும் இல்லாதபோதும் அவருடைய பிறந்தநாள் விழாவை மதுரையில் பிரமாண்டமாகக் கொண்டாடுவார்கள். அந்தத் தினத்தில் அவருடைய ஆதரவாளர்கள் அனைவரும் மதுரைக்குத் திரண்டு வந்து அவரை வாழ்த்துவார்கள். மதுரை எங்கும் மைக்செட் அலறும். மாநகரமே ஃப்ளெக்ஸ்களால் நிறைந்திருக்கும். வீட்டிலிருந்து சாரட்டு வண்டியில் கிளம்பி நகரில் பல்வேறு இடங்களில் அளிக்கப்படும் வரவேற்புகளை ஏற்றுக்கொண்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வருவார். நலத்திட்ட உதவிகளை வழங்குவார், கேக் வெட்டுவார், தொண்டர்களுக்கு கறிவிருந்து அளிக்கப்படும். அப்படியிருந்த கொண்டாட்டங்கள், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது.
 
 இந்த நிலையில் இந்த வருடம் அழகிரி வெளியூர் சென்றுள்ள நிலையில், ஆங்காங்கே அவருடைய தீவிர ஆதரவாளர்கள் மட்டும், அவர்கள் சக்திக்கு தகுந்தது போல் ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு அளித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கி, ''கழகத்தின் ஸ்கெட்சே.. .கர்ணனும் தருமரும் நீ...'' போஸ்டர்களில் புகழ் பாடி விழாவைக் கொண்டாடி முடித்துள்ளனர். அழகிரி பிப்ரவரி 1-ம் தேதி மதுரை வருகிறார். அன்று நேரில் சென்று வாழ்த்த உள்ளதாகக் கூறுகிறார்கள்.
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!