கர்நாடக முதல்வரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

காவிரி நீரைப் பெறுவது தொடர்பாகக் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்துப் பேச தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். 


தமிழகத்துக்குத் தர வேண்டிய காவிரி நீரைக் கர்நாடக அரசிடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்று கோரி பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இதுதொடர்பாகத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் காவிரி நீரைப் பெறுவது தொடர்பாகப் பெங்களூரு சென்று டெல்டா மாவட்ட அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் ஆகியோருடன் சென்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவைச் சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

இந்தச் சந்திப்புக்கான நேரம் மற்றும் தேதி ஆகியவை கேட்டு கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் முதன்மைச் செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் மற்றும் தொலைபேசியில் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!