``உள்ளாட்சித் தேர்தலிலும் குக்கர் சின்னம் கிடைக்கும்!'' - டி.டி.வி.தினகரன் நம்பிக்கை

உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் போட்டியிட ஏதுவாக குக்கர் சின்னம் கிடைக்கும் என்று ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டி.டி.வி.தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைபெற்று பெங்களூரு பரப்பர அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், அவரைச் சந்திக்க ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவான டி.டி.வி.தினகரன் இன்று (30.1.2018) பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்கு வந்தார். சிறைச்சாலைக்குள் சென்று சசிகலாவைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்கள் பேசிய தினகரனிடம், விதிமுறைகளை மீறி சிறைக்குள் சசிகலாவை அடிக்கடி பலர் சந்திப்பதாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்குப் பதிலளித்த தினகரன், ‘’15 நாட்களுக்கு ஒருமுறை சசிகலாவை சந்திக்க வருகிறேன்;நான் வராதபோது நடைபெற்ற சந்திப்புகள் குறித்து எப்படி பதில் கூற முடியும்?’’ என்று எதிர்க்கேள்வி எழுப்பினார். மேலும், சிறை நிர்வாகம் சசிகலாவைச் சந்திக்க அதிகபட்சமாக 6 பேரை மட்டுமே அனுமதிக்கிறது. இன்று கூட இளவரசி,சுதாகரன் ஆகியோரை நான் சந்திக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஏதுவாக, குக்‍கர் சின்னம் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்‍கில் எங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!