மாணவர்கள் மோதல் விவகாரம்..! காயமடைந்தவர்களிடம் காவல்துறை விசாரணை

சென்னை பட்டரவாக்கத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாணவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

சென்னை சென்ட்ரலிலிருந்து திருவள்ளூர் நோக்கி புறநகர் ரயில் ஒன்று பிற்பகலில் சென்றுகொண்டிருந்தது. ரயிலில் பொதுமக்கள், மாணவர்கள் எனக் கூட்டம் நிரம்பி இருந்தது. பட்டரவாக்கம் ரயில் நிலையம் வந்தபோது மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி, அரிவாளுடன் பிளாட்பாரத்தில் இறங்கி ஒடினர். அவர்களைப் பார்த்தப் பயணிகள் பயந்துஒடினர். சண்டையில் ஈடுபட்ட மாணவர்கள் மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

அந்தச் சண்டையில், மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த பீட்டர் மற்றும் காளிதாஸ் என்ற இரு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். காயம்பட்ட மாணவர்களிடம், தாக்குதலில் ஈடுபட்டது யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி உறுதிசெய்தனர்.

பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, மோகன் ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டனர் என்று தெரியவந்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!