ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாத பணியிடங்களை ஒழிக்க மத்திய அரசு முடிவு! 

மத்திய அரசு - நாடாளுமன்றம்

மத்திய அரசுப் பணியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள அனைத்துப் பணியிடங்களையும் ஒழிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. 

மத்தியில் அங்கம் வகிக்கும் பி.ஜே.பி. அரசு, நாட்டில் பல மாற்றங்களைச் செய்துவருகிறது. அதில் குறிப்பாகப் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., நீட் தேர்வு உள்ளிட்டவை அடங்கும். இந்த நிலையில், தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களை ஒழிப்பது தொடர்பாக அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மத்திய நிதி அமைச்சகம், பிற அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. இதற்குச் சில அமைச்சகங்கள் தரப்பில் பதில் அளித்தபோதிலும், வேறு சில அமைச்சகங்கள் உரிய பதில் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில துறைகள் மற்றும் துறைகள் தரப்பில் விரிவான அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவில்லை என்றாலும், தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான அமைச்சகங்கள் மற்றும் அவையுடன் தொடர்புடைய துறைகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களை அடையாளம் கண்டறிந்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு அனைத்து அமைச்சகம் மற்றும் துறைகளின் நிதி ஆலோசகர்கள் மற்றும் இணைச் செயலாளர்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஜனவரி 16-ம் தேதியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாகவும் காலியாக உள்ள பணியிடங்கள், ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தச் சுற்றறிக்கையை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகம், விரிவான அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யுமாறு அதனுடைய கூடுதல் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், மத்திய பாதுகாப்புப் படை தலைமை அதிகாரிகள் மற்றும் பிற துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!