`ஆன்ட்மேன் அண்டு தி வாஸ்ப்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது | marvel Studios's 'Antman and The Wasp' trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 09:09 (31/01/2018)

கடைசி தொடர்பு:09:09 (31/01/2018)

 `ஆன்ட்மேன் அண்டு தி வாஸ்ப்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது

மார்வல் ஸ்டுட்யோஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ள  `ஆன்ட்மேன் அண்டு தி வாஸ்ப்' படத்தின் ட்ரெய்லர் நேற்று (30-01-2018) வெளியானது. பால் ரட் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளிவந்த ஆன்ட்மேன் திரைப்படம் சர்வதேச அளவில் வெற்றிப் பெற்றது. அதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக தயாரிக்கப்பட்டுள்ளத் திரைப்படம் `ஆன்ட்மேன் அண்டு தி வாஸ்ப்'.  ஆன்ட் மேனிற்கு சிறிதாகும் சக்தியை கொடுத்த சயின்டிஸ்ட் பிம் தன் மகள் ஹோபிற்கு குளவியின் அமைப்புக்கொண்ட அதாவது, சிறிதாகும் உடையுடன் இறக்கைகளையும் கொடுத்திருகிறார்.  'ஆன்ட்மேன் அண்டு தி வாஸ்ப்' திரைப்படம் ஜூலை 6-ம் தெதி ரிலீஸ் செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்வெல்  ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 'பிளாக் பேன்தர்' மற்றும் 'அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்'  திரைப்படங்களும் இந்த வருடம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.         

 

 


[X] Close

[X] Close