விமான பயணத்தில் பயணிகளை ஆச்சர்யப்பட வைத்த ராகுல் காந்தி!

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று விமானத்தில் பயணம்செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் தலைவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, நேற்று டெல்லியிலிருந்து கவுகாத்திக்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது, விமானத்தில் லக்கேஜ் வைக்கும் இடத்தில், லக்கேஜ் வைக்க சிரமப்பட்டவர்களுக்குத் தாமாக முன்வந்து ராகுல் காந்தி உதவி செய்துள்ளார். ஒரு தேசியக் கட்சியின் தலைவர் எந்த ஆடம்பரமும் இல்லாமல், எளிமையாக நடந்துகொண்டது சக பயணிகளுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதைப் பயணிகளில் சிலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து ராகுல் காந்தியின் உதவிசெய்யும் பண்பைப் பாராட்டியிருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!