வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (31/01/2018)

கடைசி தொடர்பு:20:20 (31/01/2018)

ஆர்.கே நகர் தேர்தலை நடத்த 3 மடங்கு கூடுதல் செலவு! தேர்தல் ஆணையம் விளக்கம்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை நடத்த 3 மடங்கு கூடுதல் தொகை செலவானதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

EC


சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு, 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்தத் தொகுதிக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா தீவிரமாக நடைபெற்றதால் தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. அதன்பின்னர், மீண்டும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், டி.டி.வி தினகரன் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். இந்தத் தேர்தலின்போதும் பணப்பட்டுவாடா புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நடத்த ஆன செலவுத் தொகையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மொத்தம் ரூ.3 கோடியே 2 லட்சம் செலவாகியிருக்கிறது. இது வழக்கமான அளவைவிடவும் 3  மடங்கு அதிகமாகும். வழக்கமாக இடைத்தேர்தல் நடத்த ரூ.70 லட்சம் வரையே செலவாகும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.