ஸ்டாலின் பெயரைக் குறிப்பிடலாமா? - தி.மு.க திடீர் விளக்கம்

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் பெயரைக் குறிப்பிடத் தடை விதிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதைத் தி.மு.க மறுத்துள்ளது.

Stalin


தி.மு.க செயல் தலைவராக இருப்பவர் மு.க.ஸ்டாலின். இவருடைய பெயரைக் குறிப்பிடாமல், கழகச் செயல்தலைவர் என்று மட்டுமே குறிப்பிட வேண்டுமென்று முரசொலி நாளிதழில் அறிவிப்பு வெளியாகியிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக, சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. 
இதையடுத்து இதற்கு மறுப்பு தெரிவித்து தி.மு.க தரப்பிலிருந்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இது சம்பந்தமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுபோன்ற செய்தியையோ சுற்றறிக்கையையோ தி.மு.க தலைமைக் கழகம் வெளியிடவில்லையென்று ஆர்.எஸ்.பாரதி தன் அறிக்கையில் விளக்கமளித்துள்ளார். மு.க.ஸ்டாலினின் வளர்ச்சி மீது காழ்ப்பு உணர்ச்சி கொண்ட சிலர் இதுபோன்ற பொய்ச் செய்திகளைப் பரப்பி விடுவதாகவும் இது கண்டிக்கத்தக்கது என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறியிருக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!