வெளியிடப்பட்ட நேரம்: 18:02 (31/01/2018)

கடைசி தொடர்பு:18:02 (31/01/2018)

`பட்ஜெட் 2018 சாதகமா பாதகமா?' பிப்ரவரி 4-ல் சென்னையில் கருத்தரங்கு

பட்ஜெட்

அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய முழுமையான இறுதி பட்ஜெட் என்பதால், பட்ஜெட் 2018 குறித்து அனைவர் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பட்ஜெட் 2018, தொழில்முனைவோர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் சராசரி மக்களுக்கும் சாதகமாக உள்ளதா பாதகமாக உள்ளதா என்பது குறித்து விரிவாக அலசி ஆராயும் கருத்தரங்கம், நாணயம் விகடன் சார்பில், சென்னையில் வரும் ஞாயிறு (4.2.2018) அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை, ராயப்பேட்டை, அஜந்தா பஸ் நிலையம் அருகிலுள்ள இந்தியன் ஆபீசர்ஸ் அசோசியேஷனில் வைத்து நடைபெறுகிறது.

இக்கருத்தரங்கில், சென்னைப் பல்கலைக்கழகப் பொருளாதாரத்துறைப் பேராசிரியர் டாக்டர் கே.ஜோதி சிவஞானம், டைகூன் - அட்வைசர்ஸ் சி.இ.ஓ, எம்.சத்யகுமார், சோனா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் இ.எம்.சி பழனியப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். அனுமதி இலவசம்! அனைவரும் வருக! பட்ஜெட் 2018 குறித்து தெளிவு பெறுக!

உங்களுடைய இருக்கையை உறுதிசெய்ய எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு செய்யவும். 
பதிவு செய்ய, BDNCHN <space> பெயர் <space> ஊர்
அனுப்ப வேண்டிய எண்: 562636
BSNL வாடிக்கையாளர்கள் பதிவு செய்ய, BDNCHN <space> பெயர் <space> ஊர்
அனுப்ப வேண்டிய எண்: 9790990404 என்ற எண்ணுக்கு அனுப்பி முன்பதிவு செய்து, இருக்கையை உறுதிசெய்யுங்கள். முந்துபவர்களுக்கே முன்னுரிமை.