வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (31/01/2018)

கடைசி தொடர்பு:20:00 (31/01/2018)

`எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தைக் கைது செய்யுங்கள்' - போராட்டத்தில் குதித்த வசந்தமணி உறவினர்கள்! 

போளூர் வசந்தமணி உயிரிழப்புக்கு காரணமான கலசப்பாக்கம் அதிமுக எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தைக் கைது செய்யக்கோரி அவரின் உறவினர்கள், கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ந்ம் தேதி போளூர் அ.தி.மு.க பிரமுகரின் மகன் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகக் கலசப்பாக்கம் அதிமுக எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வசந்தமணி என்பவர் எம்.எல்.ஏ காலில் விழுந்து ஆசி வாங்குவதுபோல் நடித்து அவரைத் தாக்கினார். இதில் எம்.எல்.ஏ-வின் மூக்கில் காயம் ஏற்பட்டது. 

இதைக்கண்ட எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் வசந்தமணியைத் திருப்பித் தாக்க அவர் நிலைகுலைந்துபோனார். இதில் பலத்த காயமடைந்த நிலையில் வசந்தமணி போளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கலசப்பாக்கத்தில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா மேடை அமைத்தற்கு உரிய பணத்தைத் தராமல் இழுத்தடித்ததால் எம்.எல்.ஏ-வை வசந்தமணி தாக்கினார் என்று கூறப்படுகிறது.  மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய வசந்தமணியைப் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் வேலூர் சிறையில் இருந்த வசந்தமணிக்குத் திடீரென மூளையில் ரத்தக்கசிவு ஏற்படவே உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்த வசந்தமணி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.  

இதைப் பொருட்படுத்தாமல் காவல்துறையும் எம்.எல்.ஏ-வுக்கு சாதகமாக இருந்து வசந்தமணியைக் கைதுசெய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் அடைத்த இரண்டொரு நாளில் வசந்தமணிக்கு உடல்நிலை சரியில்லாமல் தலையில் காயம் ஏற்பட்டது இன்ஃபெக்‌ஷன் ஆகியுள்ளது. இதைத தாமதமாக அறிந்த போலீஸ், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி வசந்தமணி இறந்துபோனர். இந்த நிலையில் வசந்தமணியின் உயிரிழப்பை அறிந்த அவரின் உறவினர்கள், ஊர் பொதுமக்கள், தி.மு.க-வினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆகியோர் போளூர் பேருந்துநிலையம் அருகில் 1000-க்கும் மேற்பட்டோர், எம்.ல்.ஏ பன்னீர்செல்வத்தைக் கைது செய்ய வேண்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ-வை கைது செய்யவில்லை என்றால் பெரியளவு போராட்டம் வெடிக்கும் என அவர்கள் எச்சரித்தனர். எம்.எல்.ஏ-வை காப்பாற்ற மும்முரமாக செயல்பட்டு வருகிறது போலீஸ். வசந்தமணியை என்றைக்காவது காலி செய்யாமல் விடமாட்டேன் என்று கூறியதாக எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்களிடமே எம்.எல்.ஏ கூறியதாக அ.தி.மு.க வட்டாரங்கள் கூறுகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க