வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (31/01/2018)

கடைசி தொடர்பு:22:40 (31/01/2018)

'மாணவர்களைக் குறிவைத்து தாக்குகிறது போலீஸ்' - கொந்தளிக்கும் எஸ்.எப்.ஐ.

மக்களுக்காகப் போராடும் மாணவர்கள் மீது  காவல்துறையின் அத்துமீறலை தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மாணவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மாரியப்பன், செயலாளர் உச்சிமாகாளி அறிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்களை

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திடீர் பேருந்துக் கட்டண உயர்வால் மாணவர்களும் பொதுமக்களும்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்துக்குத் தலைமையேற்ற இந்திய மாணவர் சங்கத்தினரை காவல்துறையினர் திட்டமிட்டு தாக்கியும் கைது செய்தும் வருகிறது. ராஜபாளையத்தில் நிர்வாகிகள் மாடசாமி, ஜோதீஸ்வரன்  ஆகியோரை கைது செய்து கடுமையாகத் தாக்கியும், கோவையில் மாவட்டத் தலைவர் தினேஷ், கோகுல், சஞ்சய், மணிகண்டன், கோகுல், கிஷோர் ஆகிய ஆறு பேர் மீது வழக்குகளைப் பதிவு செய்தும், தஞ்சையில் மாவட்டச் செயலாளர் அரவிந்த்சாமி, சசிக்குமாரைக் கடுமையாகத் தாக்கி  சிறையிலடைத்தும், நாகப்பட்டினத்தில் மாவட்ட நிர்வாகிகள் மாரியப்பன் ஜோதிபாசு, விஜேந்திரன், அமுல்ராஜ், அன்புராஜ், சிவி, ரமேஷ், ராகேஷ், ராஜ், அன்புச்செல்வன், செந்தில், கண்ணதாசன், சிவமுகிலன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தும், ராகேஷ்,ராஜ் இருவரையும் ஐந்து நாள்களாகச் சிறையிலடைத்தும், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வீரகருப்பையா உள்ளிட்ட 19 பேர்மீது வழக்குப் பதிவு செய்தும், நெல்லை மாவட்டத் தலைவர் திருமலைநம்பி, சிவா  மீது வழக்குப் பதிவு செய்தும், மதுரை மாவட்ட நிர்வாகிகள் வேல்தேவா, செல்வா, முரளி, பிரபு, பிரேம், விக்னேஷ் குமார், செல்வகணபதி, மனோஜ்குமார், ஜெயக்குமார், ராஜ்குமார்மீது  வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், காவல்துறை கைது செய்த பாலமுருகன், மணிகண்டன், பூமிநாதன், விக்னேஸ்வரன், கோகுல், விஸ்வா, அஸ்வின் ஆகியோரை  மைனர் என்பதால் அவர்களை நீதிமன்றம் ஜாமீனில் விட்டுள்ளது. கைது செயப்பட்டவர்களை இரவுமுழுவதும் மண்டபத்தில் வைத்து, மறுநாள் சிறைபடுத்தியது சட்டத்திற்குப் புறம்பானதாகும். கடுமையாக தாக்குவது, தரக்குறைவாகத் திட்டுவது போன்ற செயலில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  நியாயமான கோரிக்கையை ஏற்காமல் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்வதை தமிழக அரசு  கைவிட வேண்டும்.  மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும். கட்டண உயர்வை திரும்பப் பெற்று அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ்பாஸை உறுதிசெய்ய வேண்டும்’’ என்று கோரியுள்ளனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க