ராஜபாளையத்தில் 20 கிலோ எடையுள்ள ஐம்பொன் சிலை கண்டெடுப்பு | Find five metal statue in Rajapalayam

வெளியிடப்பட்ட நேரம்: 23:20 (31/01/2018)

கடைசி தொடர்பு:23:20 (31/01/2018)

ராஜபாளையத்தில் 20 கிலோ எடையுள்ள ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பகத்தோப்பு பகுதியில் 20 கிலோ எடையுடன் ஒன்றரை அடி உயரமுடைய ஐம்பொன் அம்மன் சிலை இன்று கண்டெடுக்கப்பட்டு வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் செண்பகத்தோப்பு வடக்கு மரிச்சுக்கட்டி பகுதியில், செங்கல் சூளை அமைக்க மதுரையைச் சேர்ந்த பாண்டி என்பர் குத்தகைக்கு அப்பகுதியில் இடம் பிடித்து, செங்கல் சூளை அமைக்க வேலைகளைச் செய்து வந்தார். இன்று மண் தோண்டும் பணியில் ஈடுபட்டபோது 20 கிலோ எடையும், ஒன்றரை அடி உயரமும் முக்கால் அடி அகலமும், கொண்ட ஐம்பொன் அம்மன் கண்டெடுக்கப்பட்டது. உடனே இது சம்பந்தமாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார் பாண்டி. பின்பு ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரனிடம் ஐம்பொன் சிலையை பாண்டி ஒப்படைத்தார். சிலையைப்பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் அதைக் கருவூலத்தில் ஒப்படைத்தார். அச்சிலையை தொல்லியல் துறையினார் ஆய்வுக்குட்படுத்த உள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த சாமி சிலை எங்காவது காணாமல் போனதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க