உலக நன்மைக்காக நள்ளிரவு யாகம் நடத்திய அகோரிகள்..! திருச்சியில் பரபரப்பு

உலக நன்மைக்காக திருச்சியில் நள்ளிரவு  அகோரிகள் நடத்திய யாகம் பெரும்பரப்பை உண்டாக்கி உள்ளது.
அகோரி
திருச்சி  அரியமங்கலம் அருகே பாய்ந்தோடும் உய்யங்கொண்டான் வாய்க்கால் கரையில் காளி கோயில் உள்ளது. இந்தப் பகுதியில் மணிகண்டன் என்ற அகோரி வசித்துவருகிறார். அங்கு அகோர பைரவர் சிலை கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில, அந்தச் சிலைக்கு பிரிதிஷ்டை செய்திட நினைத்த அகோரி மணிகண்டன், தனக்கு நெருக்கமான அகோரிகள் மூலம் சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடத்தினர். வட இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து அகோரிகளை அழைத்து வந்த மணிகண்டன், இந்த சிறப்பு பூஜையை நடத்தியுள்ளார்.
 
நேற்றைக்கு முந்தைய நாள் அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய பூஜையில் காலபைரவர் சிலைக்கும் பிரிதிஷ்டை செய்யப்பட்டது. இதற்காக 2304 நாள்கள் சிறப்பு யாகம் செய்த பூஜை சாமான்கள் மற்றும் இந்தியாவின் 9 புனிதநீர் ஆகிவற்றைக் கொண்டு நம்பூதிரிகள், சிவாச்சாரியார் மற்றும் அகோரிகள் இந்தப் பூஜைகளை செய்தனர்.
 
அரை நிர்வாணநிலையில் மனித உடல் சாம்பலை பூசியபடி மந்திரங்கள் முழங்க, உடுக்கை மற்றும் சங்குகள் முழங்க யாகம் நடைபெற்றது. இந்த சிறப்பு யாகம் செய்வதன் மூலம் உலகத்துக்கு நன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை. விடிய விடிய நடைபெற்ற இந்த யாகத்தில் பெண்கள் பலரும் திரளாக கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அகோரி மணிகண்டன்,  "அகோரிகள், நம்பூதிரிகள், அர்ச்சகர்களை வைத்து காலபைரவர் யாகம் செய்தார். இந்த யாகம் தமிழகத்துக்கான நெருக்கடிகள் இனி வராமல் செய்யும். அப்படி என்றால் ஜெயலலிதா மரணம், விவசாயிகள் பிரச்னைகள் போன்ற அடுத்தடுத்து தமிழகத்துக்கு வரும் நெருக்கடிகளைத் தடுக்கும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!