ராகுல் டிராவிட்டின் 'இந்தியா U-19' அணி நிச்சயம் உலகக்கோப்பையை வெல்லும்..! கங்குலி நம்பிக்கை! | Under Rahul Dravid's training, India U-19 team will definitely win the world cup, says Sourav Ganguly

வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (01/02/2018)

கடைசி தொடர்பு:08:06 (01/02/2018)

ராகுல் டிராவிட்டின் 'இந்தியா U-19' அணி நிச்சயம் உலகக்கோப்பையை வெல்லும்..! கங்குலி நம்பிக்கை!

'இந்தியா U-19' என்று அழைக்கப்படும் இந்தியாவின் இளம் கிரிக்கெட் அணி, ராகுல் டிராவிட்டின் ஆளுமையின் கீழ் வந்தபிறகு எண்ணற்ற சாதனைகளைப் புரிந்துவருகிறது. முக்கியமாக, டிராவிட்டின் ஒழுக்கம், பேரார்வம் மற்றும் மன உறுதி ஆகியன, இந்த இளம் படையிடம் ஒவ்வோர் ஆட்டத்திலும் வெளிப்படுகிறது. தற்போது நடந்துவரும் ஐசிசி-யின் U-19 உலகக்கோப்பைப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிவரை முன்னேறிவிட்டது. அதுவும் அரை இறுதியில், 'பாகிஸ்தான் U-19' அணியைச் சிதறடித்த ஆட்டம் எல்லோர் மனதிலும் பல வருடங்கள் நிற்கும். இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில், சவாலான ஆஸ்திரேலிய அணியை வரும் சனிக்கிழமை சந்திக்கிறது. எல்லோரும் இந்தியாவின் வெற்றிக்காகக் காத்துக்கிடக்க, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, 'இந்திய இளம்படை நிச்சயம் கோப்பையை வெல்லும்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 இந்தியா U-19 அணி

'இந்தியா U-19' நிச்சயம் 'ஆஸ்திரேலியா U-19' அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை வெல்லும். இப்போது, இந்தியா U-19 அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்திய கிரிக்கெட் அமைப்பு சிறந்த முறையில் இருப்பதே இதற்குக் காரணம். அப்படியொரு சிறந்த கட்டமைப்பு இல்லாமல் இத்தகைய வீரர்களை உருவாக்கிட முடியாது. இன்னும் 5 வருடங்களில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற கிரிக்கெட் தேசங்களைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா ஆட்சி புரியும்.

'ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் சிறப்பாக விளையாடிவரும் இந்த அணி, நிச்சயம் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த உலகக் கோப்பைத் தொடரின் முதல் ஆட்டத்திலேயே, நாம் ஆஸ்திரேலியாவை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளோம். அதேபோல இறுதிப் போட்டியிலும் வெல்வோம்' என்று கங்குலி பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க