வெளியிடப்பட்ட நேரம்: 09:46 (01/02/2018)

கடைசி தொடர்பு:11:05 (01/02/2018)

`எங்கள் மயிலோவைக் காணவில்லை!' -  ஆச்சர்யப்படவைத்த போஸ்டர்

காணாமல்போகும் மனிதர்கள் மற்றும் பொருள்களைத் தேடித்தந்தால் சன்மானம் வழங்கப்படும் என்ற விளம்பரங்களைப் பார்த்திருக்கலாம்.  ஆனால், வளர்ப்பு நாயைக் காணவில்லை என்ற விளம்பரம் பார்த்திருக்கிறீர்களா? 

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், காணவில்லை என்ற போஸ்டர் காலை முதல் எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது.  'எங்கள் செல்லப் பிராணி மயிலோவை உயிருடன் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு, ரூ.5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும்' என்ற விளம்பரத்தின் அடியில் இரண்டு செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டிருந்தன.  

என்ன நடந்தது என்பதை அறிய போஸ்டரில் குறிப்பிட்டிருந்த செல்போன் நம்பரைத் தொடர்புகொண்டோம், 'என் பெயர் அஸ்வின். எங்கள் வீட்டில் பாக்ஸர் இனத்தைச் சேர்ந்த நாய்குட்டியை ரூ.15 ஆயிரத்துக்கு விலைக்கு வாங்கி வளர்த்துவந்தோம். அதற்கு, மயிலோ என்ற பெயர் சூட்டி குடும்பத்தில் ஒருவராகப் பாவித்துவந்தோம்.  திடீரென மயிலோவை இரண்டு நாள்களுக்கு முன் காணவில்லை.  எங்கு தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.  வீட்டில் உள்ளவர்களோ, அதன்மீது உள்ள பிரியத்தில், காணாமல்போன வருத்தத்தில் சாப்பிடாமல், உறங்காமல் இருந்தார்கள். எனவேதான், எப்படியாவது மயிலோவைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் போஸ்டர் மூலம் விளம்பரம் செய்தேன்.  அங்கே பார்த்தேன், இங்கே பார்த்தேன் என 10-க்கும் மேற்பட்ட கால்கள் வந்தன.  கடைசியாக ஒருவர், மாப்படுகை அருகே ஒரு வீட்டில் மயிலோவை கட்டிவைத்திருப்பதாகக் கூறி என்னை அழைத்துச் சென்று காண்பித்தார்.  எங்களுக்குச் சொந்தமான மயிலோ என்றதும், அதைக் கட்டிவைத்திருந்த வீட்டுக்காரரும் என்னிடம் ஒப்படைத்துவிட்டார்.  கண்டுபிடித்துத் தந்தவருக்கு, சொன்னபடி ரூ.5 ஆயிரம் கொடுத்துவிட்டேன்.  மயிலோ திரும்பக் கிடைத்ததில் மகிழ்ச்சி என்றார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க