தாமரையைத் தொடர்ந்து பாம்பு படம் நீக்கம்!- புதிய வண்ணத்தில் ரஜினியின் 'பாபா' சின்னம்

ரஜினி மக்கள் மன்ற லோகோ-விலிருந்து பாம்பு நீக்கப்பட்டுள்ளது.


 

நடிகர் ரஜினிகாந்த், 2017 டிசம்பர் 31-ம் தேதி, 'அரசியலில் தீவிரமாக இறங்குவேன்’ என்று அறிவித்தார். பின்னர், ஜனவரி 4-ம் தேதி 'பாபா' முத்திரைகொண்ட ரஜினி பேரவைக்கான மொபைல் அப்ளிகேஷனை வெளியிட்டார். இதனால், ரஜினியின் அரசியல் கட்சி சின்னமாக பாபா முத்திரை தேர்வுசெய்யப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. இதனிடையே, பாபா சின்னத்தைப் பலர் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். பாபா முத்திரையில் தாமரை மலர் இடம்பெற்றதால், ரஜினிகாந்த் பா.ஜ.க-வை மறைமுகமாக ஆதரிக்கிறார் என்று கூறப்பட்டது. இதையடுத்து, பாபா முத்திரையிலிருந்த தாமரை நீக்கப்பட்டது.

 மேலும், அதே லோகோ-வில் பாம்பு சுற்றியிருக்கும்படி இருந்ததையும் பலர் விமர்சித்தனர். ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக இந்த பாம்பு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், ரஜினியின் உத்தரவின்பேரில் லோகோ-விலிருந்து பாம்பு நீக்கப்பட்டுள்ளது. தற்போது, பாம்புக்கு பதில் ஒரு வட்டம் மட்டுமே உள்ளது. தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம் குறித்து இன்று (2.2.2018) அறிவிப்பில் மன்றத்தின் லோகோவில் பாம்பு இடம்பெறவில்லை. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!