தாய் நாய் குரைத்ததால் ஒன்பது குட்டிகளைக் கொன்ற கொடூர இளைஞர்!

சென்னையில், குடிபோதையில் நடந்துசென்ற வாலிபரைப் பார்த்து நாய் குரைத்ததால், அதன் ஒன்பது குட்டிகளையும் கொடூரமாகக் கொன்ற இளைஞரை போலீஸ் தேடிவருகிறார்கள்.

அனகாபுத்தூர் வெங்கடேஸ்வரா நகர் அவ்வை தெருவைச் சேர்ந்த பால் வியாபாரி, குணா. வேலை நேரம் போக மற்ற நேரங்களில் போதையிலேயே இருப்பார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, வீட்டில் உள்ளவர்களிடம் தகராறுசெய்திருக்கிறார். இதனால், வீட்டில் உள்ளவர்களுக்கும் இவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால், அவரை வீட்டைவிட்டு வெளியில் அனுப்பி  யிருக்கிறார்கள். குணா, போதையில்  தள்ளாடியபடி சென்றிருக்கிறார்.

அப்போது, புதிதாகக் கட்டப்படும் கட்டடம் ஒன்றில் குட்டிகளுடன் இருந்த நாய் ஒன்று குணாவைப் பார்த்து குரைத்தது. இதனால், ஆத்திரம் அடைந்த குணா, அங்கிருந்த கட்டை ஒன்றை எடுத்து அந்த நாயைத் துரத்தியடித்தார். அதைத்தொடர்ந்து, அங்கிருந்த ஒன்பது குட்டி நாய்களும் குரைக்க, கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற குணா, அந்த ஒன்பது நாய்க்குட்டிகளையும் கொடூரமாக, கற்களாலும் கட்டையாலும் தாக்கிக் கொன்றுவிட்டார். போதையில் குணா இருந்ததால், அவரது உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டார்கள். இந்தச் சம்பவத்தைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர், சங்கர் நகர் போலீஸில் புகார்செய்தார். இறந்துகிடந்த நாய்களின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், வேப்பேரி அரசு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஒன்பது நாய்களைக் கொன்ற குணாவை போலீஸார் தேடிவருகின்றனர். குட்டிகள் இறந்த சோகத்தில் உள்ளது, தாய் நாய். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!