`நீங்க செல்லுர் ராஜு போலவே இருக்கீங்க!'- குஷியில் செல்ஃபி-க்கு போஸ் கொடுத்த தினகரன் ஆதரவாளர்

மைச்சர் செல்லூர் ராஜுவைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட நபர் ஒருவர், அ.தி.மு.க தினகரன் அணியில் உள்ளார். 

செல்லூர் ராஜு

தமிழக அமைச்சர்களில், கூட்டுறவுத்துறை அமைச்சர்  செல்லூர் ராஜுவும் அவரின் திட்டங்களும் அகில உலக ஃபேமஸ் ஆனவை. வைகை அணையை தெர்மக்கோல் போட்டு அவர் மூடிய காட்சிகளை சீன நாட்டுப் பத்திரிகைகள்கூட புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டன. தமிழக அமைச்சர்களில் வேறு யாரும் அவர் அளவுக்கு புகழ் பெற்றிருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல், அடிக்கடி அரிய கருத்துகளைக் கூறி மக்களை சிந்திக்கவைப்பதோடு,  சிரிக்கவும் வைப்பார். சமூக வலைதளங்களுக்கு மட்டும்தான் செல்லூர் ராஜூ டைம்பாஸ். மற்றபடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் செல்லூர் ராஜு முக்கிய தூண்களில் ஒருவர். அதனால்தான், செல்லூர் ராஜு வீட்டு காதணி விழாகூட தமிழகத்தில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால், விஷயம் இதுவல்ல!

செல்லூர் ராஜுவைப் போலவே உருவ ஒற்றுமைகொண்ட ஒருவர், தினகரன் அணியில் இருப்பதுதான் லேட்டஸ்ட் செய்தி. அண்மையில், கோத்தகிரியில் தினகரன் அணியினரின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த செல்லூர் ராஜுவின் டூப்ளிகேட், அனைவரையும் கவர்ந்தார். அ.தி.மு.க தொண்டர்கள் பலரும் அவரை செல்லூர் ராஜுவின் க்ளோனிங் என்றே அவரை அழைத்தார்கள். மீடியாக்களும் அவரை மொய்த்தன. 

கூட்டத்துக்கு வந்திருந்த  தொண்டர்கள் அவரைப் பார்த்து வியந்ததோடு,  'நீங்கள் செல்லுர் ராஜு போலவே இருக்கிறீர்கள்' என்று கூறி அவருடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர். செல்லுர் ராஜு டூப்ளிகேட்டும்,  பெருமை பிடிபடாமல் செல்ஃபிக்கு போஸ்கொடுத்தார்.

ஏற்கெனவே, யார் ஸ்லீப்பர் செல் என்று தெரியாமல் மக்கள் குழம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!