வாடிக்கையாளர் போர்வையில் கொள்ளையடித்த பெண்கள்! சிசிடிவி-யால் சிக்கினர்

திருட்டு


25,000 ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருள்களை 3 பெண்கள் சேர்ந்து திருடி அவற்றைத் தங்கள் உடைகளுக்குள் மறைத்துவைத்து ஆட்டோவில் சென்றக் காட்சி சிசிடி கேமராவில் சிக்கியுள்ளனர்.

மதுரையில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் தற்போது அதிக அளவு நூதன முறையில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதிக அளவு கூட்டம் நடமாடும் இடமான மதுரை பழைய நத்தம் ரோடு விசாலாச்சிபுரத்தில் உள்ள தனியார் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் துணிச்சலாக 3 பெண்களும் விலை உயர்ந்த பொருள்களைத் தங்களின் உடைகளில் சுருட்டிக்கொண்டு சாதாரணமாக வெளியே செல்லும் காட்சி அதிரவைத்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற அன்று இரவு 9 மணியளவில் அந்த டிபார்மென்ட் ஸ்டோரில் கூட்டம் அதிக அளவு இருந்ததால் அதைச் சாதகமாகப் பயன்படுத்திய லதா, தேவி, செல்வி என்ற மூன்று பெண்களும் திருடுவது சிசிடிவி-யில் பதிவானது. இந்த மூன்று பெண்களையும் தெரிந்த நபர்கள் சிலர் குற்றவாளிகள் இவர்கள்தான் என உறுதிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையிலும் ராமகிருஷ்ணன் என்பவரின் புகாரின் அடிப்படையிலும் தல்லாகுளம் காவல்துறையினர் 3 பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!