`பட்ஜெட் 2018!’ - கமல் சொல்லும் சாதக பாதகங்கள் 

’மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தின் மீது மத்திய அரசு பாராமுகத்துடன் இருப்பதாகக் கருதுகிறேன் ’ என்று நடிகர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

kamal

2018-19ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று தாக்கல் செய்தார். கிராம மேம்பாடு, விவசாயிகளின் நலன், சுகாதாரம் உள்ளிட்டவற்றை மையப்படுத்தியே இந்த பட்ஜெட் இருக்கும் என்று மத்திய அரசு முன்னர் தெரிவித்திருந்தது. அதன்படி ஏழை மக்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு நலத் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க தரப்பில் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், மத்திய அரசின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சித்துவரும் கமல்ஹாசன் நேற்று தாக்கல்செய்யப்பட்ட மத்திய பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கையின் சாதக பாதகங்களைக் குறிப்பிட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல் ‘மத்திய அரசின் கடைக்கண் பார்வை விவசாயிகளின் பக்கம், கிராமத்தின் பக்கம் சற்றே திரும்பியிருக்கிறது. அது மனதுக்கு சற்றே இதமாக இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசு பாராமுகமாக இருப்பதாகக் கருதுகிறேன். மேலும், அறிஞர்களுடன் கலந்தாலோசித்து என் கருத்தைத் தெளிவாகச் சொல்லுவேன்’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!