சிவகார்த்திகேயன் பட டைட்டிலுக்கு நியூமராலஜி பார்க்கும் இயக்குநர்! | Details about sivakarthikeyan's next movie

வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (02/02/2018)

கடைசி தொடர்பு:13:11 (02/02/2018)

சிவகார்த்திகேயன் பட டைட்டிலுக்கு நியூமராலஜி பார்க்கும் இயக்குநர்!

சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் `வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' ஆகிய இரண்டு படங்களும் தரை லோக்கல் லெவலில் ஹிட்டடித்து சிவகார்த்திகேயனை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. இதனாலேயே பொன்ராம்மீது சிவகார்த்திகேயனுக்கு எக்கச்சக்க அன்பும் பாசமும் உண்டு. கண்ணை மூடிக்கொண்டு மூன்றாவது படத்துக்கு பொன்ராமுக்கு கால்ஷீட் கொடுத்தார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன்

இந்த ஹிட் கூட்டணிக்கு தாறுமாறான எதிர்பார்ப்பு இன்டெஸ்ட்ரியில் கூடியிருக்கிறது. டைட்டில் எதுவும் வைக்கப்படாமலேயே 'sk12' என்று படபூஜை போடப்பட்டு குற்றாலம் மற்றும் தென்காசி சுற்றுவட்டாரங்களில் முக்கால்வாசி படம் முடிவடைந்திருக்கிறது. 'டைட்டில் என்ன' என்று சிவகார்த்திகேயனிடமும் பொன்ராமிடமும் கேட்டால், 'அது இன்னும் வைக்கலை ப்ரோ!' என்று சொல்லி சமாளிக்கிறார்கள்.

காமெடி, ஆக்‌ஷன் எனக் கலந்துகட்டி உருவாகும் இந்தப் படத்தின் டைட்டிலை பிப்ரவரி 17, சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் அன்று ஃபர்ஸ்ட் லுக்கோடு வெளியிட முடிவெடுத்திருக்கிறார்கள் இருவரும். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனின் பெயர் சீமைராஜா. அதனால் சீமைராஜா என்று வைத்துவிடலாம் என்று பொன்ராம் யோசனைகூறி டிஸைன் ஒர்க் போய்க்கொண்டிருந்தது. `இல்லண்ணே... சீமைராஜாவைவிட சீமைத்துரை செம மாஸா இருக்கும்ல...' என்று யோசனை சொல்லியிருக்கிறாராம் சிவகார்த்திகேயன். `அதுவும் நல்லாத்தான் இருக்கு!' என இரண்டு டைட்டிலையும் ஃபர்ஸ்ட் லுக்கோடு டிஸைன் செய்து நேமாலஜி, நியூமராலஜி எல்லாம் பார்த்துப் பார்த்து செதுக்கிக்கொண்டிருக்கிறார் பொன்ராம். ஜெயிக்கப்போவது யாரு... சீமைராஜாவா சீமைத்துரையா... பொன்ராமுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மட்டுமே வெளிச்சம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க