மேம்படுத்தப்படும் பாம்பன் ரயில் பாலம்! களத்தில் இறக்கப்பட்ட ஆள் இல்லா விமானம்

ராமேஸ்வரம் தீவினை நாட்டின் நில பரப்புடன் இணைக்கும் வகையில் `100 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தை மேம்படுத்துவது  தொடர்பான ஆய்வு ஆள் இல்லா விமானம் மூலம் இன்று மேற்கொள்ளப்பட்டது.

பாம்பன் ரயில் பாலத்தினை ஆய்வு செய்யும் ஆளில்லா குட்டி விமானம்
 

நாட்டின் புனித ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கி வரும் ராமேஸ்வரம் மற்றும் 1964-ம் ஆண்டு வரை சிறந்த துறைமுக நகரமாக விளங்கிய தனுஷ்கோடியை நாட்டின் நிலப்பரப்புடன் இணைக்கும் வகையில் பாம்பன் கடல் மீது ரயில் பாலம் அமைக்கப்பட்டது. கடந்த 1914-ம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட இந்தப் பாலம் 100 வருடங்களைக் கடந்தும் கம்பீரமாக இயங்கிவருகிறது. 146 தூண்கள் மூலம் 145 கர்டர்களைக் கொண்டு இணைக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் வழியாகக் கப்பல்கள் செல்லும் வகையில் 'ஹெர்சர் தூக்குப் பாலம்' உள்ளது. முழுதும் மனித சக்தியைக்கொண்டே திறக்கப்பட்டு கப்பல்கள் செல்ல வழி விடப்படுகிறது. இந்நிலையில் இந்த ஹெர்சர் பாலத்துக்குப் பதிலாக இயந்திரம் மூலம் இயங்கக்கூடிய புதிய பாலத்தை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கென ரூ.35 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரயில் போக்குவரத்து மேம்பாட்டு அமைப்பின் சார்பில் பாம்பன் ரயில் பாலத்தின் உறுதித்தன்மை மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கான ஆய்வை சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இன்று மேற்கொண்டது. வீடியோ மற்றும் புகைப்படக் கருவிகளுடன் கூடிய ஆளில்லா குட்டி விமானத்தின் மூலம் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுப் பணியின் அறிக்கை கிடைக்கப்பெற்ற பின் புதிய பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கும் எனத் தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!