ஆமை உருவ மணல் சிற்பங்களை உருவாக்கி அசத்திய மாணவர்கள்! | Save Turtles campaign organized in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (02/02/2018)

கடைசி தொடர்பு:17:40 (02/02/2018)

ஆமை உருவ மணல் சிற்பங்களை உருவாக்கி அசத்திய மாணவர்கள்!

அழிந்துவரும் கடல் உயிரினங்களில் ஒன்றான கடல் ஆமைகள் குறித்து பொது மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னை பாலவாக்கம் கடற்கரையில் சமீபத்தில் நடைபெற்றது.

ஆமை

நிகழ்வில் ஆமை உருவம் கொண்ட மணல் சிற்பங்களை உருவாக்கி பொதுமக்கள் கவனத்தை மாணவர்கள் ஈர்த்தனர்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் பேசுகையில்,

``கடலில் மீன்வளம் பெருக உதவி செய்யும் ஆலிவ் ரெட்லி ஆமைகள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை இனப்பெருக்கம் செய்வதற்காக ஆண்டுதோறும் புதுச்சேரி, தமிழக கடற்கரைக்கு வந்துசேரும். நடுக் கடலிலிருந்து கரைக்கு வந்து மணலில் முட்டையிட்டுச் செல்லும் இவை, சில வருடங்களாக ஆமைகள் அதிக அளவில் இறந்து போக்கின்றன. கடந்த வாரத்துக்கும் முன்புகூட 200-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன. இதுபோன்ற விஷயத்தை தடுத்துநிறுத்த வேண்டும். இதைப் பற்றி பொதுமக்களிடம் போதிய விழிப்பு உணர்வு ஏற்படுத்தவே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது’' என்றார்

கடல் ஆமை

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் பேசுகையில்:

நாளுக்கு நாள் ஆமைகளோட எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. நமக்கு அடுத்து வரும் தலைமுறை ஆமையைக் காண்பதே அரிதாகிவிடும். புகைப்படத்தில் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

turtle

இதில் சுமார் 1,500 மாணவர்கள் 300 குழுக்களாகப் பிரிந்து கடல் ஆமைகளின் உருவத்தை மணல் சிற்பங்களாக வரைந்தனர். இதில் சிறந்த படைப்புகளுக்குப் பரிசு வழங்கப்பட்டன. முதல் பரிசு ரூ.7,500. இரண்டாம் பரிசு ரூ.5,000 வழங்கப்பட்டன.

இனிவரும் காலகட்டத்தில் பொது மக்கள் இயற்கையைப் பாதுகாத்து, ஆமைகளின் முக்கியத்துவம் குறித்தும், கடற்கரையைச் சுத்தமாகப் பாதுகாக்க வேண்டும். இனி வரும் தலைமுறை கடல்வாழ் உயிர்னங்களைக் காண்பார்கள்.