வெளியிடப்பட்ட நேரம்: 19:23 (02/02/2018)

கடைசி தொடர்பு:19:23 (02/02/2018)

வேலூர், நெல்லையைத் தொடர்ந்து தூத்துக்குடி! - ரஜினியின் அடுத்தடுத்த மூவ்

தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த். தூத்துக்குடி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றச் செயலாளராக நீண்டகாலமாக இருந்துவந்த ஏ.ஜெ.ஸ்டாலின், ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

தூத்துக்குடியில், கடந்த  ஜனவரி 27-ம் தேதி, மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சுதாகர் மற்றும் ரஜினியின் நண்பர் ராஜூ ஆகியோர் கலந்துகொண்டு, ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்களின் செயல்பாடு, புதிய உறுப்பினர் சேர்க்கை ஆகியவைகுறித்து விவாதித்தனர். ஆலோசனைக் கூட்டத்தின் துவக்கத்தில் நடிகர் ரஜினி பேசிய 18 நிமிட வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது.

அக்கூட்டத்தில் பேசிய ராஜூ, "பதவி பெறுவது மட்டும் நமது நோக்கம் அல்ல. மக்களுக்கு நல்லது செய்வதுதான் நம் நோக்கமாக இருக்க வேண்டும்.  நாம், தலைவர் பாதையில் செல்ல தயாராக இருக்க வேண்டும். யாருக்கு பதவி கிடைத்தாலும் அதை சந்தோஷமாக வரவேற்று, அந்த நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு அளித்துப் பணியாற்ற வேண்டும். இதுதான் தலைவர் ரஜினி அவர்களின் எண்ணம்." என்றார். 

நெல்லை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை அறிவித்த ரஜினி, இன்று தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பட்டியலை வெளிட்டுள்ளார். 

நீண்டகாலம் மாவட்டச் செயலாளராக இருந்த ஏ.ஜெ.ஸ்டாலின், மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மாவட்ட இணைச் செயலாளராக ஜெ.சக்தி முருகன், மாவட்ட துணைச் செயலாளர்களாக டி.எஸ்.பி.எஸ். பெரிய சுவாமிநாதன், எம்.முகம்மது கனி ஞானியப்பா, ஆர்.ரமேஷ் ஆகியோரும், இளைஞர் அணிச் செயலாளராக ஆர்.வேல்முருகன், மீனவர் அணிச் செயலாளராக என்.அருண் ஆனந்த், விவசாய அணிச் செயலாளராக  கந்த சிவ சுப்பு,  தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக  எம்.விஜய் ஆனந்த், மகளிர் அணிச் செயலாளராக எம்.ராஜ லெட்சுமி, வழக்கறிஞர் அணிச் செயலாளராக எம்.செந்தில் ஆறுமுகம்  மற்றும் வர்த்தக அணிச் செயலாளராக கே.ஜெயக்கொடி ஆகியோர் மாவட்ட நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க