“ஆறு மாதத்திற்கு முன் அரசியலுக்கு வந்தவர் பற்றிப் பேச விரும்பவில்லை!”- விஷால் மீது சரத்குமார் காட்டம்

 

சமத்துவ

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற  சமத்துவ மக்கள் கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த அக்கட்சியின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்குச் சென்றடையுமா என்று தெரியவில்லை. மக்கள் முன்னேற்றத்துக்கான எந்தத் திட்டமும் இல்லை. விவசாயம், ரயில்வே, பொது பட்ஜெட் இவை அனைத்தும் தனித்தனி பட்ஜெட்டாக இருந்தால்தான் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் ச.ம.க. சார்பில்  தனித்துப் போட்டியிடுவோம்'' என்றார்.

நடிகர் விஷால் அரசியலுக்கு வருவதாகக் கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு,  ''ஆறு மாதத்துக்கு முன்பு அரசியலுக்கு வந்தவர் பற்றிப் பேச விரும்பவில்லை,  நான் 21 ஆண்டுகளாக தமிழகத்தில்  செயல்பட்டு வரும் அரசியல்வாதி'' என்று கூறினார். தொடர்ந்து செயல் வீரர்கள் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!