“காட்டாங்கொளத்தூரில் காந்திக்கு சிலை வேண்டும்!” பொதுமக்கள் கோரிக்கை.

காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ரயில் நிலையத்தில் காந்தி சிலை ஒன்றை வைத்து பொதுமக்கள் மரியாதை செய்தனர். அப்போது இங்கு காந்தி சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.

காந்திசிலை, காட்டாங்கொளத்தூர்

1946ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி மதுரை மற்றும் பழனிக்கு ஆலய தரிசனம் செய்வதற்காக சென்னையில் இருந்து தனிரயில் மூலம் காந்தி பயணம் மேற்கொண்டார். சென்னையில் இருந்து இரவு 10.30க்கு புறப்பட்ட ரயில் சிலமணி நேரம் கழித்து காட்டுப்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்றது. பிறகு உடன் வந்தவர்களுடன் காந்தியடிகள் இரவு தங்கினார்.

அடுத்தநாள் விடியற்காலையில் பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார். காந்திவந்திறங்கிய காட்டுப்பாக்கம் ரயில் நிலையம் பின்னாளில் காட்டாங்கொளத்தூர் ரயில் நிலையமாக மாறியது. காந்தியடிகள் இங்கு வந்து தங்கியதை நினைவுபடுத்தும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி இரண்டாம் நாள் காந்திக்கு சிறிய அளவிலான சிலை வைத்து மரியாதை செய்து அதை எடுத்துச் சென்றுவிடுவார்கள். இன்று காந்திக்கு மரியாதை செய்ய வந்த பொதுமக்கள், அவருக்கு நிரந்தரமாக சிலை ஒன்றை ரயில் நிலையத்தில் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!