’குளத்துக்கும் உயிர் உள்ளது!’ - கோவையில் சர்வதேச ஈர நிலங்கள் தின விழிப்புஉணர்வு நிகழ்ச்சி | World Wetland day celebration in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 08:45 (03/02/2018)

கடைசி தொடர்பு:08:45 (03/02/2018)

’குளத்துக்கும் உயிர் உள்ளது!’ - கோவையில் சர்வதேச ஈர நிலங்கள் தின விழிப்புஉணர்வு நிகழ்ச்சி

சர்வதேச ஈர நிலங்கள் தினம் (World Wetland day) நேற்று (2.2.2018) கடைபிடிக்கப்பட்டது. நகர்ப்புறத்தில் உள்ள ஈர நிலங்களைக் காக்க வேண்டும் என்பதுதான் இந்த ஆண்டுக்கான கருப்பொருள். இதையொட்டி, கோவை சிங்காநல்லூர் குளத்தில் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு சிங்காநல்லூர் குளத்தை சுத்தம்செய்தனர். மேலும், மரம் நடுதல், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட சைக்கிள் பேரணி மற்றும் ஈர நிலங்கள் தின போஸ்டர் வெளியிடும் நிகழ்ச்சிகளும் நடந்தன.

World Wetland day

இதுகுறித்து, சிங்காநல்லூர் குளத்தை பராமரித்து, அதைப் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவும் வகையில் களப்பணியில் ஈடுபட்டுவரும் 'நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கல்வி மையத்தினர்' (CUBE) கூறுகையில், 'குளம் என்பது வெறும் நீர் சேகரித்து வைக்கும் தொட்டி இல்லை. அதற்கு உயிர் உள்ளது. அதன் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் அதை நம்பி ஏராளமான பல்லுயிர்கள் உள்ளன. நகர்ப்புறத்தில் உள்ள குளங்களைக் காப்பது மிகவும் அவசியம். அதனால், நகர்ப்புறமும் காக்கப்படும். அதை, மாணவர் பருவத்திலிருந்து ஆரம்பித்தால்தான் கொண்டுசெல்ல முடியும்' என்றனர். இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட வனத்துறை அலுவலர் சதீஸ்குமார், துணை கமிஷனர் சுஜீத்குமார் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.