திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் நெல்லை - விருதுநகர் இடையே 18 நாள்களுக்கு ரத்து! | Thiruchendur - palakkad pasanger train canceled between Tirunelveli - virudunagar for maintenance work

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (03/02/2018)

கடைசி தொடர்பு:11:30 (03/02/2018)

திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் நெல்லை - விருதுநகர் இடையே 18 நாள்களுக்கு ரத்து!

பொறியியல் பிரிவு பணிகளால், திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில், இன்று (3.2.2018) முதல் வரும் பிப்ரவரி 21-ம் தேதி வரை  நெல்லை – விருதுநகர் இடையே ரத்துசெய்யப்பட்டுள்ளது.

trichendur railway station

இதுகுறித்து தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மதுரைக் கோட்டத்தில் துலுக்கர்பட்டி – நல்லி ரயில் நிலையங்களுக்கிடையே, வரும் 21-ம் தேதி வரை பொறியியல் பிரிவு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் (வண்டி எண் : 56770),  இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை நெல்லை – விருதுநகர் வரை ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல, மறு மார்க்கமாக இதே ரயில் (வண்டி எண் : 56769), வரும் 21-ம் தேதி வரை நெல்லை – விருதுநகர் வரை ரத்து செய்யப்படுகிறது. ஆனால், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல செல்லும். இதே திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில், வரும் 7, 14 மற்றும் 21-ம் தேதிகளில் நெல்லை – மதுரை வரை ரத்துசெய்யப்படுகிறது. மறு மார்க்கமாக, அதே தேதிகளில் இதே ரயில், மதுரை – நெல்லை வரை ரத்துசெய்யப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க