போலி கேஸ்சிலிண்டர் ஆய்வாளர்களைக் கண்டுபிடிப்பது எப்படி?

மீபகாலமாக தமிழகத்தில், வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. கேஸ்சிலிண்டர் ஆய்வாளர்கள் போல போலியாக வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கேஸ்சிலிண்டர் பாதுகாப்புகுறித்து பரிசோதிப்பவர்களை, சமையலறை வரை அனுமதிக்கவேண்டிய அவசியமும் இருக்கிறது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்தால், போலி ஆய்வாளர்களைக் கண்டுபிடிப்பது எளிது. போலிகளைத் தடுப்பதற்காக கேஸ் நிறுவனங்கள், ஆய்வுசெய்ய வரும் தினம் குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடுகின்றன. இணையதளங்களிலும் இதுகுறித்த தகவல் இடம்பெற்றிருக்கும். சம்பந்தப்பட்ட ஏஜென்ஸிகளும்கூட, வாடிக்கையாளர்களுக்கு போனில் தகவல் அளிக்கும். 

fake

வீட்டுக்கு கேஸ்சிலிண்டர்களைச் சோதனையிட வருபவர்கள், தங்கள் வருகைகுறித்து முன்னரே உங்களுக்குத் தகவல் தெரிவிப்பார்கள். நீங்கள் வைத்திருக்கும் கேஸ் இணைப்புகுறித்த முழுமையான தகவல் அவர்களிடத்தில் இருக்கும். சம்பந்தப்பட்ட ஏஜென்ஸி வழங்கிய முறையான அடையாள அட்டையை வாங்கிப் பாருங்கள். சேவைக் கட்டணம் ரூ.150. இதற்கு ஜிஎஸ்டி 18 சதவிகிதம். வீட்டுக்கு வந்துள்ள நபர் குறித்து உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட ஏஜென்ஸிக்கு போன் செய்து கேட்டுவிடுங்கள். போலிகளிடம் ஏமாறாமல் இருந்தால் அசம்பாவிதங்களைத் தடுத்துவிடலாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!