தமிழகம் முழுவதும் நாளை 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது!

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு தெற்கு ரயில்வே செயல்பட்டு வருகிறது. தென்மாநிலங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கான ரயில்கள் பெரும்பாலும் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. 

இதற்கிடையே  தமிழகம் முழுவதும் நாளை 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் முன்பதிவு இணையதளம் செயல்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு ஒத்திகைக்காகச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட பயணிகள் முன்பதிவு நாளை பிற்பகல் 2.05 மணி முதல் 3.45வரை ஒருமணி 40 நிமிடங்களுக்கும், நாளை இரவு 11.30 மணி முதல் 5 ஆம் தேதி 1.45 மணி வரை இரண்டே கால் மணி நேரமும் செயல்படாது. அந்த நேரங்களில் சென்னை மண்டலத்துக்குட்பட்ட தெற்கு, தென்மத்திய, தென்மேற்கு ரயில்வேக்களில் உள்ள முன்பதிவு மையங்களில் பயணச்சீட்டு முன்பதிவு, ரத்துசெய்தல், இடம் இருப்பது பற்றிய விசாரணை ஆகியவையும் செய்ய முடியாது. இதேபோல், இணையதளத்திலும் கூட இந்த மண்டலப் பகுதிகளிலிருந்து புறப்படுவதற்கான பயணச்சீட்டை இந்தக் குறிப்பிட்ட நேரங்களில் முன்பதிவு செய்ய முடியாது. அதேநேரத்தில் இந்த மண்டலங்களைத் தவிர மற்ற மண்டலப் பகுதிகளிலிருந்து புறப்படுவதற்கான பயணச்சீட்டை இணையதளத்தில் முன்பதிவு செய்வதில் எந்தப் பாதிப்பும் இருக்காது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!