வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (04/02/2018)

கடைசி தொடர்பு:02:00 (04/02/2018)

தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – திருச்சியில் முழங்கிய  மாணவர்கள்

கல்வி உதவித்தொகையை குறைத்துள்ளதைக் கண்டித்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என திருச்சியில் நேற்று மாணவர்கள் அறிவித்துள்ளனர்.  

மாணவர்கள்

கடந்த 2012- ம்ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆதிதிராவிடர் மற்றும் பழக்குடியின நலத்துறையின்கீழ் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் அரசாணையை கொண்டுவந்தார். அதன் பலனாக இதுவரை சுமார் 1.50 லட்சம் மாணவர்கள்  உயர்கல்வியில் பயனடைந்துள்ளனர்.

இப்படியிருக்க, தமிழக அரசு, முன்பிருந்த அரசாணைப்படி வழங்கப்பட்ட உதவித்தொகையை பாதியாக குறைத்துள்ளது. அதிலும் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை, 85 ஆயிரம் ரூபாயை 50 ஆயிரம் ரூபாய் என சமீபத்தில் குறைத்து அரசாணை பிறப்பித்துள்ளது. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அடுத்தடுத்து மனு அளித்தனர். ஆனாலும் பலனில்லை. இந்நிலையில், இன்று திருச்சி ஜங்க்சன் பொறியியல் மற்றும் கல்லூரி மாணவர்கள் 400-க்கும் மேற்பட்டவர்கள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய பாரிமைந்தன், 'கல்வி உதவித்தொகை என்பது பிச்சை அல்ல. எங்களில் உரிமை. நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் அரசாணையை கொண்டுவந்தார். ஆனால் தற்போதைய எடப்பாடி அரசு, புதிய அரசாணை மூலம், வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை குறைத்துள்ளது. இந்த அரசாணையை தமிழக அரசு திரும்ப பெறவேண்டும். அதேபோல்,  கலைக்கல்லூரிகளில் படிக்கும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையினை உயர்த்தி வழங்கவேண்டும். இதனை நடைமுறைப்படுத்தாவிட்டால் பிப்ரவரி 23-ம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்” என்றார்கள் ஆவேசமாக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க