`ஆட்சியின் ஓராண்டு வெற்றிவிழா பிப்ரவரி 14-ல் கொண்டாடப்படும்!' - கடம்பூர் ராஜூ தகவல்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஓராண்டு ஆட்சியின் வெற்றிவிழா பிப்ரவரி 14-ம் தேதி கொண்டாடப்படும் என்று கூறியுள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ.

கடம்பூர் ராஜூ

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றார். அப்போது சசிகலா அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக ஆனார். சசிகலாவுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான சச்சரவு அ.தி.மு.க இரண்டாக உடைய காரணமாக இருந்தது. பின்னர், எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்றார். பழனிசாமியும் பன்னீர்செல்வமும் மீண்டும் இணைந்தனர். இதனால், சசிகலா மற்றும் அவரது குடும்பம் தனித்து விடப்பட்டது. இன்றுவரை அதே நிலைதான் தொடர்கிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைய உள்ளது. இந்த ஓராண்டு நிறைவை கொண்டாட உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். 

இது குறித்து அவர் மேலும், `முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற உள்ளது. இந்த ஆட்சியின் வெற்றிவிழா வரும் பிப்ரவரி 14-ம் தேதி கொண்டாடப்படும். கடந்த ஓராண்டில் 30 மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டுள்ளது' என்று தகவல் தெரிவித்துள்ளார் கடம்பூர் ராஜூ. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!