வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (04/02/2018)

கடைசி தொடர்பு:10:55 (04/02/2018)

`தமிழகத்தில் ராகுல் காந்தி விரைவில் சுற்றுப் பயணம்!' - திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர், `காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி விரைவில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்' என்று தகவல் தெரிவித்துள்ளார். 

திருநாவுக்கரசர்

இது குறித்து அவர் மேலும், `ஆளுங்கட்சிக்கு எதிராக உள்ள கட்சிகள் வரும் 6 ஆம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளோம். தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வலியுறுத்தி  காங்கிரஸ் சார்பில் நாளை மாநிலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். நெல்லையில் காங்கிரஸ் அலுவலகத்தை பூட்டி எதிர்ப்பு தெரிவித்தது குறித்து குஷ்பு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பேட்டியளித்துள்ளார்.