பெற்றோர் சம்மதத்துடன் இத்தாலி காதலியை இந்து முறைப்படி கரம்பிடித்த நாகர்கோவில் இளைஞர்!

இத்தாலியைச் சேர்ந்த காதலியை நாகர்கோவில் இளைஞர் ஒருவர் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார். 


குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வடசேரி பகுதியை சேர்ந்த  சுப்பிரமணி என்ற இளைஞர் சீனாவில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் வேறொரு நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இத்தாலி நாட்டை சேர்ந்த இளம்பெண் ஃப்ளாவியாவுக்கும், இருவருக்கும் காதல் மலர்ந்தது. காதல் குறித்து பெற்றோர்களிடம் கூறி சம்மதம் பெற்ற சுப்பிரமணி, ஃப்ளாவியாவின் குடும்பத்தினரிடமும் சம்மதம் பெற்றார். இதையடுத்து, அவர்கள் தங்கள் பெற்றோர் சம்மதம் கிடைத்தவுடன், நாகர்கோவிலில் திருமணம் நடத்தத் திட்டமிட்டனர். 

அதன்படி, நாகர்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் சுப்பிரமணி -ஃப்ளாவியா ஜோடிக்கு இன்று (4.2.2018) வெகுவிமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. அப்போது இந்து முறைப்படி, ஃப்ளாவியாவுக்கு சுப்பிரமணி தாலி கட்டினார். அதேபோல், இத்தாலி நாட்டு கலாசார முறையின்படியும் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். திருமண நிகழ்வில் சுப்பிரமணி-ஃப்ளோவியா ஆகிய இருவரின் பெற்றோர், உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதில், மணப்பெண்ணின் உறவினர்கள் சிலர், சேலை அணிந்து கலந்துகொண்டனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!