பாக். படையினர் அத்துமீறித் தாக்குதல்: 3 இந்திய ராணுவத்தினர் பலி! | Pakistan forces shelling in J&K border districts: 3 Army men martyred!

வெளியிடப்பட்ட நேரம்: 03:28 (05/02/2018)

கடைசி தொடர்பு:08:55 (05/02/2018)

பாக். படையினர் அத்துமீறித் தாக்குதல்: 3 இந்திய ராணுவத்தினர் பலி!

ஜம்மு-காஷ்மீர் எல்லை மோதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய மிகக் கடுமையான மார்ட்டர் குண்டுவீச்சுத் தாக்குதலில், இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும், இரண்டு வீரர்களும் உயிரிழந்தனர். மற்றொரு ராணுவவீரரும், சிறுமி ஒருவரும் காயம் அடைந்தனர்.

ஷாப்பூர் என்ற இடத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மற்றம் மக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து, பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதாக, பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து ரஜோரி மாவட்டத்தின் மஞ்சகோட், நவ்ஷேரா பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் குண்டுவீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். மஞ்சகோட் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், ராணுவ அதிகாரி ஒருவர் உள்பட இந்திய ராணுவத்தினர் மூன்று பேர் பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். 

பாதுகாப்புப் பணியில் இருந்த இந்திய ராணுவத்தினரும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட இந்த மோதல், இருதரப்பினருக்கும் இடையே பல மணி நேரம் நீடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புல்வாமா, ரஜோரி உள்ளிட்ட எல்லைப் பகுதியில் உள்ள மாவட்டங்களில், இந்திய ராணுவ நிலைகள்மீது பாகிஸ்தான் படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க