வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (05/02/2018)

கடைசி தொடர்பு:08:46 (05/02/2018)

பி.ஜே.பி கூட்டணியிலிருந்து தெலுங்குதேசம் வெளியேறாது!- மத்திய அமைச்சர் உறுதி

ஒய்.எஸ்.சவுத்ரி . தெலுங்குதேசம்பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தெலுங்குதேசம் வெளியேறாது என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படாததால், அம்மாநில முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, பி.ஜே.பி. கூட்டணியிலிருந்து வெளியேறுவார் என்று பரவலாகத் தகவல்கள் வெளியாகின. பட்ஜெட்டைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தெலுங்குதேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சந்திரபாபு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்குதேசம் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ஒய்.எஸ். சௌத்ரி, "ஆந்திர மாநிலத்தின் பிரச்னைகள்குறித்து மத்திய அரசிடம் முதலில் எடுத்துரைப்போம்; அதற்குரிய தீர்வு காண முயற்சிப்போம்" என்றார்.

எங்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால், தெலுங்குதேசம் கட்சி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்தும் என்று அவர் குறிப்பிட்டார். 

எனவே, பி.ஜே.பி கூட்டணியிலிருந்து உடனயாக தெலுங்குதேசம் வெளியேறாது என்பது இப்போதைக்கு உறுதியாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம்-பி.ஜே.பி கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க