மணல் குவாரிகளுக்கான தடை நீங்கியது..! உச்ச நீதிமன்றம் அதிரடி

'தமிழகத்தில் செயல்படும் மணல் குவாரிகளை நிரந்தரமாக மூட வேண்டும்' என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

'தமிழகத்தில் செயல்பட்டுவரும் மணல் குவாரிகளை ஆறு மாத காலத்துக்குள் நிரந்தரமாக மூடவேண்டும்' என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2017 நவம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து தமிழக அரசு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தது. ஆனால், உயர் நீதிமன்றம் அந்தத் தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது. அதையடுத்து, மணல் குவாரிகளை மூடுவதற்கு உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மணல் குவாரிகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், இதுதொடர்பான வழக்கை இரண்டு வார காலத்துக்குத் தள்ளிவைத்துள்ளது. இதையடுத்து, மணல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!