வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (05/02/2018)

கடைசி தொடர்பு:18:45 (05/02/2018)

உயர் நீதிமன்ற உத்தரவு எதிரொலி! வழிபாட்டுத்தலங்களை அகற்றிய அதிகாரிகள்

 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சங்கராபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கம்பன் நகரில் அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்பில் நாகம்மாள் கோயில், ஆர்.சி சர்ச் ஒன்றும் கட்டப்பட்டிருந்தது. இதை இங்கிருந்து அப்புறப்படுத்தக் கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம், சேம்பர் ஆப் காமர்ஸ் போன்ற அமைப்புகள் மாவட்ட ஆட்சியருக்கு அளித்திருந்தார்கள். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தேவகோட்டை ஆர்.டி.ஓ உத்தரவுப் பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவு 10 மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிவகங்கையைச் சேர்ந்த வழக்கறிஞர் சித்தார்த் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். காரைக்குடியில் அரசு நிலங்கள் வழிபாட்டு தலமாக, வணிக நிறுவனங்களாக, தனிநபர் ஆக்கிரமிப்பாகவும் இருந்து வருகிறது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் தீர்ப்பு கடந்த ஏழு மதங்களுக்கு முன்பே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வந்துவிட்டது.

அந்தத் தீர்ப்பில் ஆறு மாத காலத்துக்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அறிக்கை சமர்பிக்க வேண்டுமென்று உத்தரவுப் பிறப்பித்திருந்தது. அதன் அடிப்படையில்தான் இன்று வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸார் எனக் குவிக்கப்பட்டு அந்த இரண்டு வழிபாட்டு தலங்களையும் காலையில் இடித்துவிட்டார்கள். இதனால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்குடியில் அகற்றப்பட வேண்டிய கோயில்களோ வணிக நிறுவனங்களோ இன்னும் அகற்றப்படவில்லை என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க