பறக்க நினைப்பவர்களுக்கு கால்கள் தேவையில்லை!- போட்டிகளில் அசத்தும் மாற்றுத்திறனாளி வீரர்

மதுரையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில், ராமநாதபுரம் அருகே உள்ள பெருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் கருணாகரன், குண்டு எறிதல்,வட்டு எறிதல் போட்டிகளில் 2-ம் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த ராமநாதபுரம் வாலிபர்

ராமநாதபுரம் அருகே உள்ள பெருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், சேதுக்கரை மகன் கருணாகரன் (28). இரு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டதால் இவரால் எழுந்து நடக்க முடியாது. உடலால் ஊனம் அடைந்தாலும் மனதால் ஊனம் அடையாத கருணாகரன், சிறந்த விளையாட்டு வீரராக மாறி மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகிறார். 

பி.காம் பட்டதாரி வாலிபரான இவர், கடந்த ஜனவரி மாதம் 26,27,28 ஆகிய தேதிகளில், மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் விளையாட்டுகளில் 2- வது இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.  இதன் தொடர்ச்சியாக, வரும் மார்ச் மாதம் ஹரியானா மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில், தமிழகத்தின் சார்பில் பங்கேற்க உள்ளார். இதையடுத்து, கருணாகரன் தான் பெற்ற பதக்கம் மற்றும் சான்றிதழ்களுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனைச் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!