நாதுராம்... இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி விவகாரம்! : இப்போதுவரை ஸ்டேட்டஸ் அப்டேட்! #Timeline #2MinsRead

ன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் கைதுசெய்யப்பட்ட கொள்ளையன் நாதுராமை விசாரணைக் காவலில் வைத்து விசாரித்த போலீஸார், விசாரணை அறிக்கையை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதில் நாதுராமைப் பற்றிய பல பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் இந்த விவகாரத்தில் இதுவரை நடந்தவை என்ன... ஒரு டைம்லைன்!

                          இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்துக்கு கமிஷனர் ஆறுதல்

நவம்பர் 17, 2017 அன்று காலை, சென்னைப் புழல், புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலை, முத்துமாரியம்மன் கோயில் தெருவில்  உள்ள 'மகாலட்சுமி தங்க மாளிகை' என்ற  நகைக்கடையில் கொள்ளை எனத் தகவல்.

நவம்பர் 17, 2017 அன்று நண்பகல்  கொளத்தூர், ஸ்ரீநகர் அனெக்ஸ் 2-வது தெருவில் வசிக்கும் நகைக்கடையின் உரிமையாளர் முகேஷ்குமார், கொளத்தூர் போலீஸில் புகார்.

நவம்பர் 17, 2017  நண்பகல். சம்பவ இடத்தில் அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனர் சுதாகர் நேரில் ஆய்வு. 

நவம்பர் 17, 2017 பகல் 3 மணி. தடயவிய நிபுணர்கள், போலீஸ் மோப்பநாய், போலீசார் குவிப்பு.

நவம்பர் 17, 2017 பகல் 4 மணி.  கொள்ளைச் சம்பவம், நவம்பர் 16, 2017 அன்று பிற்பகல் நடந்திருக்கலாம் என்று போலீஸ் கணிப்பு.

நவம்பர் 17, 2017 மாலை 5 மணி. கொள்ளையர்கள், மாடியில்  உள்ள ராஜேஷ் என்பவர் கடைக்குச் சென்று, அதன் பின் அங்கிருந்து தப்பித்ததை போலீஸார் உறுதி செய்தனர்.

நவம்பர் 17, 2017 இரவு 7 மணி. கொள்ளையர்கள் பதற்றமின்றி நடந்து செல்லும்  சி.சி.டி.வி. பதிவுகளை போலீஸார் கைப்பற்றினர்.

நவம்பர் 18, 2017, அதிகாலை. போலீஸ் உயரதிகாரிகள் தீவிர ஆலோசனை. மூன்று தனிப்படை அமைப்பு.

நவம்பர் 18, 2017, காலை 8 மணி. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் தனிப்படை போலீஸார்  கண்காணிப்பு

நவம்பர் 18, 2017, காலை 11 மணி. கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலைய சி.சி.டி.வி. காட்சிப் பதிவுகளை போலீஸார் கைப்பற்றி ஆய்வு.

நவம்பர் 19, 2017,  பிற்பகல், கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படைப் போலீஸார் ராஜஸ்தான் செல்ல முடிவு.

டிசம்பர் 8, 2017 அன்று  மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர்  இன்ஸ்பெக்டர் முனிசேகர் ஆகியோரைக் கொண்ட  தனிப்படைப் போலீஸார், ராஜஸ்தான் மாநிலப் பயணம்.

டிசம்பர் 12, 2017 அன்று அதிகாலை. பனிப்பொழிவில் ராஜஸ்தான் மூழ்கிய நேரம். கொள்ளையன் நாதுராமைப் பிடிக்கும் முயற்சியில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கியால் சுடப்பட்டு மரணம்.

periyapandi

டிசம்பர் 12, 2017 அன்று, மாலை தமிழக இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் வேகமாகப் பரவி, அதிர்வை உண்டாக்கியது. இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்குப் பல்வேறு தரப்பிலும் ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் 13 முதல், ஜனவரி 12 வரை நாதுராம் மற்றும் அவன் கூட்டாளிகளைப் பிடிக்க பல்வேறு முயற்சிகளை இரு மாநிலப் போலீஸாரும் மேற்கொண்டனர். சென்னை போலீஸ் இணை கமிஷனர் சந்தோஷ்குமார் ராஜஸ்தான் பயணம்.

2018, ஜனவரி 13- ம் தேதி. ஒரு மாத முயற்சிக்குப் பின் 'ராஜஸ்தான் மாநில தனிப்படை போலீஸாரால், குஜராத்தில் பதுங்கியிருந்த நாதுராம் கைது' எனப் பாலி மாவட்ட போலீஸ் எஸ்.பி. தீபக் பார்கவ் தகவல்.

ஜனவரி 14 முதல் ஜனவரி 24 வரை நடந்தவைகள்

(1) இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு, மகன்கள் கல்விச்செலவு அரசு ஏற்பு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

(2) சென்னை விமான நிலையத்தில் முதல்வர், போலீஸ் டி.ஜி.பி., கமிஷனர் மற்றும் போலீஸார் பெரியபாண்டி உடலுக்கு அஞ்சலி.

(3) சென்னை வடக்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் எச்.எம். ஜெயராம் மற்றும் தனிப்படைப் போலீஸார், நாதுராமை ஒப்படைக்கக் கோரி ஜெய்தாரன் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்.

(4)  ஜனவரி 23, 2018-ம் கூடுதல் கமிஷனர் ஜெயராம், இணை கமிஷனர் சந்தோஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், விஜயராகவன்,    நடராஜ் மற்றும் 4 சப்-இன்ஸ்பெக்டர்களுடன்  விமானம் மூலம் ராஜஸ்தான் சென்றனர். நாதுராம், கூட்டாளிகள் தினேஷ் சவுத்ரி, புத்தாராம் ஆகியோர்  ஜனவரி 26 அன்று சென்னை  வருகை.

(5) சென்னை நீதிமன்ற நேர்நிறுத்தலுக்குப் பின் புழல் சிறையில் அடைப்பு. கொள்ளையர்களை விசாரிக்க  கோர்ட்டில் போலீஸார் மனு.

(6) ஜனவரி 30-ம் தேதி. கொள்ளையர்களை 10 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி. நாதுராம் வாக்குமூலம். சென்னை சௌகார்பேட்டை நகைக்கடையில் ஒன்றரை கிலோ தங்கம் மீட்பு

(7)  கொள்ளையர்களிடம் நகை வாங்கிய  கர்நாடகாவைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் ராம்லால் போலீஸிடம்  சிக்கினார். குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களுக்குக் கொள்ளையன் நாதுராம், நகைக்கடை அதிபர் ராம்லால் ஆகியோரைப் போலீஸார் அழைத்துச்சென்று நேரில் விசாரணை.

விசாரணைப் பயணம் தொடர்கிறது...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!