மானிய விலை ஸ்கூட்டர்: பெண்களின் கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு

மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், பிப்ரவரி 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, வேலைக்குச்செல்லும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் (25,000) வழங்கப்படும் என அ.தி.மு.க அறிவித்தது. தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்து, பிப்ரவரி 24-ம் தேதி முதல் இத்திட்டம் தொடங்கப்படும் எனவும் அறிவித்தது. மேலும், முதற்கட்டமாக ஒரு லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக, கடந்த மாதம் 22-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுவந்தன. அரசின் இந்த அறிவிப்புக்கு பெண்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்தனர்.  விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்ததால், நேற்று மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. கடைசி நாளானதால், பலருக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், தற்போது இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 5 நாள்கள் நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!